உடல் முழுக்க கொம்பு முளைத்த அங்கிலோசர்: 16.8 கோடி ஆண்டு பழைய முள் எலும்பு அதிசயம் – jannalmedia.com

குட்டையான, அகலமான காபி டேபிளுக்கு உடம்பெல்லாம் கொம்பு முளைத்து உங்களை நோக்கி நகர்ந்து வருவதாக கற்பனை செய்து பாருங்கள். அதுதான் அங்கிலோசர். டைனோசர் போல அழிந்துபோன ஒரு தொல் பழங்கால விலங்கு.

இது போன்ற அங்கிலோசர் ஒன்றின் உடலில் இருந்த முள் முள்ளாய் நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு எலும்புத் துண்டு ஒன்றின் புதைபடிவம், ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தை சேர்ந்த ஆய்வாளர் டாக்டர் சூசி மெய்டமெண்ட் தன்னிடமுள்ள அற்புதமான இந்த புதைபடிவம் பற்றி விளக்குகிறார்.

அவரிடம் இருப்பது விலா எலும்பின் ஒரே ஒரு துண்டுதான். அந்த விலா எலும்புத் துண்டில்தான் முள் முள்ளாக நீட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால், இதை மட்டுமே வைத்துக்கொண்டு இது ஒரு புதுமையான கவசம் போர்த்திய டைனோசர் வகையைச் சேர்ந்த விலங்கினுடையது என்று எந்த ஒரு தொல்லுயிரியல் அறிஞரும் கூறிவிடமுடியும். இதுவரை கண்டறியப்பட்டதிலேயே மிகப்பழமையான அங்கிலோசர் எலும்பு இது என்பதையும் அவரால் கூறிவிட முடியும்.

இதில் முக்கியமானது என்னவென்றால் இது ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மொராக்கோ நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த வகை உயிரிகளின் எலும்பு எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில்லை.

“இது மிக ஆச்சரியமானது என்றாலும் அதைவிட விநோதமான ஒன்று இந்த கண்டுபிடிப்பில் உள்ளது. இந்த நீட்டிக்கொண்டிருக்கிற முட்கள் நேரடியாக எலும்பில் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. இது எப்படி என்பதுதான் புதிராக உள்ளது,” என்றார் டாக்டர் மெய்டமென்ட்.

- Advertisment -

Latest