காலநிலை மாற்றம்: சூறாவளிகள் மக்கள்தொகை அதிகமுள்ள பகுதிகளில் இனி அதிகரிக்கும்: ஆய்வு

வெப்ப மண்டல சூறாவளிகள் ஏற்படக்கூடிய பகுதிகளின் பரப்பு காலநிலை மாற்றத்தால் விரிவடையும் என்று புதிய ஆய்வு கூறுகிறது. மேலும், அதனால் லட்சக்கணக்கான மக்கள் இந்தப் பேரிடர்கள் உண்டாக்கப் போகும் புயல்களால் பாதிக்கப்படக்கூடிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

தற்போது, புயல் அல்லது சூறாவளி என்றழைக்கப்படும் இந்தப் பேரிடர்கள், முதன்மையாக பூமத்திய ரேகைக்கு வடக்கு மற்றும் தெற்கே அமைந்திருக்கும் வெப்பமண்டலப் பகுதிகளில் மட்டுமே ஏற்படுகின்றன. ஆனால், அதிகரித்து வரும் வெப்பநிலையால், இந்த வானிலை நிகழ்வுகள் மத்திய அட்சரேகைகளிலும் உருவாகும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அத்தகைய பகுதிகளில் நியூயார்க், பெய்ஜிங், பாஸ்டன், டோக்யோ போன்ற நகரங்களும் அடக்கம்.

நேச்சர் ஜியோசயின்ஸ் (Nature Geoscience), என்ற ஆய்விதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், சூறாவளிகள் கடந்த 30 லட்சம் ஆண்டுகளாக இருப்பதைவிடப் அதிகமாக நிகழும் என்று அவர்களுடைய ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாகக் கூறுகின்றனர். 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், துணை வெப்பமண்டல புயலான ஆல்ஃபா, போர்ச்சுகலில் நிலச்சரிவை ஏற்படுத்தியபோது, சூறாவளியால் ஒப்பீட்டளவில் ஏற்பட்ட சிறிய அளவிலான சேதங்களும் சில தலைப்புச் செய்திகளுக்கு வித்திட்டன.

ஆனால், விஞ்ஞானிகளுக்கு இது மிகவும் முக்கியமான நிகழ்வு.

யேல் பல்கலைக்கழத்தின் இயற்பியலாளர் முனைவர்.ஜோச்வா ஸ்டுடோம், “இது போன்ற நிகழ்வை இதற்கு முன்பு நாங்கள் கவனிக்கவில்லை,” என்று கூறுகிறார்.

“பாரம்பரிய அடிப்படையில், ஒரு வகை சிதைவோடு ஏற்பட்ட நடு-அட்சரேகை புயலாக இருந்தது. மேலும், அந்தச் சிதைவின்போது, வெப்பமண்டல சூறாவளி உருவாவதற்கான சரியான சூழ்நிலை உண்டானது. இது போர்ச்சுகலுக்கு இதற்கு முன்பு நடந்ததில்லை,” என்றும் அவர் கூறினார்.

முனைவர்.ஸ்டுடோம், வெப்பமடைந்து வரும் காலநிலை, உலகின் பெரும்பான்மை மக்கள் வசிக்கும் பெருமளவிலான பொருளாதார நடவடிக்கைகள் நிகழும், மத்திய அட்சரேகையில் இந்த வகையான புயல்களை அதிகமாக உருவாக்குவதை காணமுடியும், என்று கூறுகின்ற இந்த ஆராய்ச்சியின் முதன்மை ஆசிரியர்.

புவி வெப்பமடையும்போது, பூமத்தி ரேகை மற்றும் துருவப் பகுதிகளுக்கு இடையிலான வெப்பநிலையில் இருக்கும் வேறுபாடு குறையும். மேலும், இது, வேகமான காற்றோட்டத்தையும் (Jet Stream) பாதிக்கும் என்று அவர் விளக்கினார். பொதுவாக, இத்தகைய உயரமான காற்றோட்டம் சூறாவளிகளை பூமத்திய ரேகைக்கு நெருக்கமாகவே வைத்திருக்கும், ஒரு வகை எல்லைக் காவலாகச் செயல்படுகின்றன.

“காலநிலை வெப்பமடையும்போது, மத்திய அட்சரேகையில் நடக்கும் வேகமான காற்றோட்ட செயல்பாடு பலவீனமடையும் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளின்போது பிளவுபடவும் கூடும். இது இந்த மாதிரியான சூறாவளி உருவாவதற்கு வழிவகுக்கிறது.”

சூறாவளிகளின் மீதான, மனிதத் தூண்டுதலின் விளைவாக உண்டான காலநிலை மாற்றத்தின் தாக்கம் பற்றிய கேள்வி கடந்த காலங்களில் சர்ச்சைக்குரியதாக இருந்தது. ஆனால், சமீபத்திய ஆராய்ச்சிகளின், இரண்டுக்குமான தொடர்பு தெளிவாகி வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம், காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கு இடையிலான குழு, வெப்பமடைந்துவரும் காலநிலையின் அறிவியல் குறித்த அதன் 6-வது மதிப்பீட்டு அறிக்கையின் முதல் பகுதியை வெளியிட்டது.

அதன் ஆசிரியர்கள், சூறாவளி மற்றும் வெப்பமண்டல புயல்களைப் பொறுத்தவரை, மனிதத் தூண்டுதல்களால் வலுப்பெற்றுள்ளது என்பதில் “அதிக நம்பிக்கை,” இருப்பதாகக் கூறியுள்ளனர்.

- Advertisment -

Latest