கனடாவில் இந்திய வம்சாவளி இன்ஃப்ளூயன்சர் கொலை

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர் Nancy Grewal கனடாவில் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் கருத்துகளை பகிர்ந்து பலரிடம் பிரபலமானிருந்த நான்சி கிரேவாலின் மரணம் இந்திய வம்சாவளி சமூகத்திலும் ஆன்லைன் உலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nancy Grewal

இந்த சம்பவம் கனடாவின் LaSalle பகுதியில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீசாரின் தகவலின்படி, செவ்வாய்க்கிழமை இரவு குத்துதல் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றும் உயிரிழப்பு

சம்பவ இடத்திற்கு வந்தபோது நான்சி கிரேவால் கடுமையான குத்துக் காயங்களுடன் கிடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தற்போது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

போலீசார் தீவிர விசாரணை

இந்த தாக்குதலின் பின்னணி என்ன, யார் இதில் தொடர்புடையவர்கள் என்பதைக் கண்டறிய போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள வீடுகளின் CCTV காட்சிகள், டாஷ்கேம் அல்லது டோர் கேமரா பதிவுகள் இருந்தால் வழங்குமாறு பொதுமக்களிடம் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நான்சி கிரேவால் யார்?

Nancy Grewal சமூக ஊடகங்களில் தனது நேர்மையான மற்றும் பல நேரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக அறியப்பட்டவர். குறிப்பாக பஞ்சாப் மற்றும் இந்திய வம்சாவளி சமூகத்தைச் சார்ந்த அரசியல், சமூக பிரச்சினைகள் குறித்து அவர் அடிக்கடி கருத்துகளை பகிர்ந்து வந்தார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நான்சி கிரேவால் பல ஆண்டுகளாக கனடாவில் வசித்து வந்தார். அவரது திடீர் மரணம் அவரது ரசிகர்களையும் சமூக ஊடக பயனர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் துயர அலை

இந்த சம்பவம் வெளிவந்ததும் சமூக ஊடகங்களில் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். குற்றவாளிகளை விரைவாக கைது செய்து நீதியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்நிலையில், Canada போலீசார் இந்த வழக்கில் மேலதிக ஆதாரங்களை சேகரித்து குற்றவாளியை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

- Advertisment -

Latest